விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்திருந்த அனைத்து பொறுப்பாளர்களையும் கலைத்து தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் அமைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் செயலாளராக மின்னல் வி. குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் வாழ்த்து பெற்று பல்லாவரம் வந்த மின்னல் குமார் அவர்களுக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து பகுதி சார்பில் வழி நடுங்கும் மலர் தூவி மேல தாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பல்லாவரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட செயலாளர் மின்னல் குமார் மரியாதை செலுத்தினர் பின்னர் கட்சி நிர்வாகிகள் பலர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட கழக இணைச் செயலாளர் மதன்குமார் பொருளாளர் தம்பிராஜா துணை செயலாளர் விஜய் அமிர்தராஜ் துணைச் செயலாளர் கே வி சுனிதா செயற்குழு உறுப்பினர்கள் ரெபேக்கா, தினேஷ் ,ஆசியா மகேந்திரன், செந்தூர்கனி, சிவகுரு, பக்தவச்சல் ராவ், தேசக்குமார், விஜய கணேஷ் ஈஸ்வர் பால பிரசாத் ஆகிய நிர்வாகிகளுக்கும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் மாலை அணிவித்து சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)