• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது-திருமாவளவன்

ByPrabhu Sekar

Mar 14, 2025

மதுரையில் இருந்து சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தைச் சார்ந்த ஐஐடி பேராசிரியர் உதயகுமார் வடிவமைக்க சின்னம் ரூபாய்க்கான அடையாளச் சின்னம். அதனை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. உலக அளவில் பிரபலமாகியிருக்கிறது தற்போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிற இந்த சூழலில் வழக்கமாக நாம் பயன்படுத்தக்கூடிய ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

எந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரியவில்லை இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட அந்த வடிவத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என யாரும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக கூறியதாக தெரியவில்லை.

பழைய நடைமுறையை அப்படியே பின்பற்றி இருக்கிறார்கள் இது குறித்து தமிழக அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்.உலகளாவிய அளவில் இணைந்து பணியாற்ற இன்னும் ஒரு மொழி தேவைப்படுகிறது ஆங்கிலம் பரவலாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் ஒரு இணைக்கு மொழியாக ஆங்கிலம் உள்ளது. தாய்மொழியுடன் சேர்த்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்துவது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஏதுவானது.

மூன்றாவது மொழி நான்காவது மொழி ஐந்தாவது மொழி என்பது தனி நபரின் விருப்பத்திற்கு ஏற்றது அது பணி சம்பந்தப்பட்டது. எந்த நோக்கத்திற்கு மற்றொரு மொழி படிக்க வேண்டுமோ அப்படி படித்துக் கொள்ள போகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேர்தல் போன்ற கொள்கையில் திணிக்கிறார்கள்.

அதற்காக ஆங்கிலத்தை ஒரு அந்நிய மொழி என்பது போல் போல் வெறுப்பை விதைக்கிறார்கள். இந்தியாவில் இந்து மதம் ஒரே மதம் ஹிந்தி மொழி உறுதி மொழியாக மாறும் பொழுது தான் இந்திய உணர்வு உள்ளவர்களாக இந்தியர்களாக மாற முடியும் என்ற கணக்கில் இதை செய்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ள பன்முகத்தன்மையை வசிதைக்கும் செயல் இந்தியை விரும்பி படிக்கிற நபர்கள் படிக்கட்டும் எதையும் திணிக்க கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து.

இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் அதன் யாது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அதை கேட்பார்கள் தேடித்தேடி சென்று படிப்பார்கள் அதை யாராலும் தடுக்க முடியாது ஆனால் அதை யாரும் படிக்கவில்லை இவர்கள் திணிக்கிறார்கள். இந்தியாவின் மையப்பகுதியில் உள்ள மாநிலங்களில் இந்திய திணித்து அவை இன்று இந்தி பேசு மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களையும் இந்தி பேசும் மாநிலங்களாக மாற்ற வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் இந்த ஆதீக்க போக்கை எதிர்க்கிறோம். ஆனால் பாஜகவை சார்ந்தவர்கள். அது ஏதோ தேவாமிர்தம் போலவும் அது ஏழை குழந்தைகளுக்கு கிடைக்க கூடாதா என்பது போலவும் சித்தரிக்கிறார்கள் இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது.