திமுக தனது ஊழலை மறைத்து திசை திருப்பவும், தேர்தலை எதிர்கொள்ளவும் இன்றைய பிரச்சனைகளை விட்டுவிட்டு மும்மொழி கொள்கையையும் , தொகுதி மறுசீரமைப்பையும் பேசி வருகிறது.
2100 கோடியை காட்டி மும்மொழி கொள்கையை திணிக்காமல் 5000 கோடி தருவதாக ஏற்றுகொள்ளுமாரு மத்திய அரசு கோரிக்கை வைக்கலாம். பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் பேட்டி.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது,
இரு மொழி மும்மொழி கொள்கை என இருதரப்பிலும் நாடகமாடி வருவதாகவும், கடந்த ஆண்டு திமுக அமைச்சர் தலைமையிலான குழு மத்திய கல்வி அமைச்சர் ப்ரதான் அவர்களை சந்தித்து பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் மும்மொழி கொள்கையை ஏற்றுகொள்வதாக கடிதம் கொடுத்துவிட்டு மத்திய நிதியை கோரியதாகவும், இப்போது அதை மறைத்து நாடகமாடுவதாகவும் தெரிவித்தார். அதேபோல் பாமக பொருத்தவரை தமிழ் என்ற ஒரு மொழி கொள்கைதான் என்றும், வட மாநிலங்களிலும் ஒரு மொழி கொள்கைதான் , ஆனால் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை தர மாட்டோம் என கூறுவது ஏற்புடையது அல்ல என்றார்.
அதேபோல் பொதுபட்டியலில் உள்ள கல்வியில் மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தையும் கொள்கையையும் மாநில அரசு ஏற்பதும் ஏற்காததும் அதன் உரிமை என்றும், இந்தியாவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம் கல்வி சுகாதாரம் போன்று அனைத்திலும் முன்னேறி வரும் நிலையில் மத்திய அரசு ஒரு கொள்கையை தினிக்க கூடாது என்றார். மேலும் திமுக அரசும் பாஜக வும் பேசி வைத்ததை போல் தினம் விவாதித்து வருவதாகவும், தமிழகத்தில் மதுவில் ஆயிரம் கோடி ஊழல், அரிசியில் ஊழல் , பெண்களுக்கு பாதுகாப்பில்லை ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மும்மொழி கொள்கை குறித்து பேசி அவற்றை திசை திருப்புவது தேவையற்றது என்றும், கடந்தாண்டு தமிழக பட்ஜெட் நான்கறை லட்சம் கோடி இருந்த நிலையில் இந்தாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசின் 2100 கோடி தேவையில்லை மும்மொழி கொள்கையும் தேவையில்லை என திமுக அறிவிக்கலாம் .
ஆனால் மொழி பிரச்சனையை வைத்துதான் ஆரம்பத்தில் திமுக வெற்றி பெற்றதால் , இப்போது தேர்தல் வர உள்ள நிலையில் அப்படி செய்யபோவதில்லை , பாஜக வும் அதற்கேற்ப வாய்ப்பளிக்கிறது என்றார். அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தென் மாநில முதல்வர்கள் ஒன்றுனைத்து இந்தியா முழுவதும் ஒரே நிலையிலான தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டம் கூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் தலிமையிலான கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும், மருத்துவம், பெண் பாதுகாப்பு, சுற்றுசூழல் , விவசாயம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தற்போது இன்றைக்கே கவணிக்க வேண்டி வேண்டி உள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வர உள்ள தொகுதி மறுசீரமைப்பு குறித்து இன்றைக்கு பேசுவதை தவிர்க்க, மத்திய அரசு உரிய தெளிவு படுத்தி இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும், ஏனென்றால் இன்றைய பிரச்சனைகளை விட்டுவிட்டு, திமுக அதன் ஊழலை மறைத்து திசைதிருப்பவும் வரபோகும் தேர்தலுக்காகவும் இதை திமுக பயண்படுத்தி வருகிறது என்றார்.

மேலும் உயர் நிலை மாணவர்களின் கல்வி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கவே மும்மொழி கொள்கை என பாஜக கூறுகிறது என்றால் அப்போது மும்மொழி கொள்கை உத்திர பிரதேசம் பீகார் போன்ற வட மாநிலங்களில் ஏன் பொருந்தாதா என்றும் ஏன் அங்கு மும்மொழி கொள்கை கொண்டுவரவில்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டுமென்றால் நீட்டை ரத்து செய்யுங்கள் என்றும், நீட் ஏழை மாணவர்களுக்கும் கிராமபுற மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இரு மொழி கொள்கையுடன் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியடைந்து வரும் தமிழகத்தை ஏன் மாற்ற வேண்டும் என்றார்.
மேலும் இரு மொழி கொள்கையை வைத்து கொண்டு தற்போதுள்ள கல்வி முறையால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலகமெங்கும் பயணிப்பதாகவும், ஹிந்தி உட்பட எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அதை திணிக்க கூடாது என்றும் கூறிய அவர் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் 2100 கோடி தரமாட்டொம் என மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதற்கு பதிலாக 5000 கோடி தருகிறொம் ஏற்று கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கலாம் என்றார்