• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால் ஒரு வாரத்தில் அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்

ByPrabhu Sekar

Mar 14, 2025

சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால், அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்!தாம்பரத்தில் அமைச்சர் அன்பரசன் பேசினார்.

தாம்பரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மேயர் வசந்தகுமாரி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்து கொண்டு மகளினருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் அன்பரசன்,
அதிமுக பொது செயலாளர் எடப்பாடியை கடுமையான விமர்சனம் செய்தார். கூவத்தூரில் ஓபிஎஸ்யை விலக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வந்தார்கள் என்றும்,சசிகலா காலில் விழுந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள் , இவர் முகம் அப்போதுதான் எல்லாருக்கும் தெரிய வந்ததாகவும் விமர்சனம் செய்ததோடு,

ஐந்து வருடத்திற்கு முன்பு எல்லா தலைவரும் திடீரென வந்தவர்கள் என்றும் , நம்முடைய முதல்வர் ஒரு வருடம் மிசாவில் இருந்தார் என குறிப்பிட்டு காட்டினார்.

மேலும்
சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால் ஒரு வாரத்தில் அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார் என்றும்,

இவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் வருவார்கள் என்றும்,
சில நபர்கள் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள், நம்ம வீட்டில் கூட சில ரசிகர்கள் இருப்பார்கள் , அவர்களுக்கு சோறு போடாதீர்கள் ,ரசிகனா இருக்கட்டும் என ஆலோசனை வழங்கினார்.