• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மேம்பால பணிக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பூமி பூஜை

ByKalamegam Viswanathan

Mar 7, 2025

மதுரை வலையங்குளம் சாலை விபத்தில் பல உயிர்கள் பலியான பின்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்தார்.

மதுரை – தூத்துக்குடி நான்கு வழி சாலையில் வலையங்குளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 36 கோடி 62 லட்சம் மதிப்பீட்டில் அமையுள்ள மேம்பால பணிக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.
மேலும் அவனியாபுரம் 100 வது வார்டு பகுதியில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பில் நிழல் குடையும்,மதுரை சிந்தாமணி மாநகராட்சி எண்பத்தி ஒன்பதாவது வார்டுபகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க 25 லட்சம் ரூபாய் பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வலையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை பிள்ளை பெருமாள், தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு பொதுச்செயலாளர் சிங்கராஜன், ஜோதிமுருகன், வழக்கறிஞர்
முத்துமணி ,கிராம மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

இதனைத் தொடர்ந்து எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்தித்து கூறியதாவது..,

மத்திய அமைச்சர் நித்தின் கட்காரி ஒப்புதலின் அடிப்படையிலே இந்த மேம்பால திட்ட பணிகள் நடைபெற உள்ளது மேம்பாலம் இல்லாததால் பல உயிரிழப்புகள் நடந்த நிலையில் தற்போது உயிரிழப்புகளை தடுக்க இந்த மேம்பால பணிகள் அமைய உள்ளது .இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு?

எந்த திட்டத்திற்கு எதற்காக நிலம் போகிறது என்பதை பார்க்க வேண்டும் எய்ம்ஸ்க்கு நிலம் கொடுத்தால் அது டெல்லிக்கு செல்ல போவதில்லை நமக்கு தான் வரப்போகிறது தீவிரவாதிகள் வேண்டுமென்றால் அப்படி பேசி இருக்கலாம்.

எனக்கும் மாணிக்கம்தாகூருக்கும் எந்த ஒரு பணி போரும் இல்லை என செல்வப் பெருந்தகை கூறியது குறித்து கேள்விக்கு?

எங்களுக்குள் ஒரு பனிபோரும் கிடையாது. (காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை – மாணிக்கம் தாகூர் MP) இதில் என்ன பனிப்போர் இருக்கிறது

காமராஜர் ஆட்சி குறித்த கேள்விக்கு?

காமராஜர் வழங்கியது தான் காமராஜர் ஆட்சி அதைத்தவிர எந்த ஆட்சியோடு ஒப்பிடும்போது சரியாக இருக்காது என்பது எனது கருத்து அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே தான் இருப்பேன்

ஹிந்தியை மட்டும் குறிப்பிட்டுக் கூறி மும்மொழி கொள்கை எதிர்ப்பது ஏன் குறித்த கேள்விக்கு?

இரண்டு மொழிகளுக்கு மேல் குழந்தைகளால் படிக்க முடியாது பிள்ளைகள் பொறுத்தவரை மொழி படிப்பதை வாழ்க்கை கிடையாது மொழியை யார் வல்லுனராக வேண்டும் என்று நினைக்கிறாரோ அல்லது வெளிநாடு போக நினைப்பவரோ அவர்கள் மொழி படித்துக் கொள்ளலாம் தேவைக்காக தான் மொழியே ஒழிய தவிர மொழியை வைத்து வாழ்ந்து விட முடியாது.

சந்திரபாபு நாயுடு சொல்கிறார் 10 மொழியை படிக்க வைப்பேன் என்று சொல்கிறார் அவர் மகன் மற்றும் பேரனை முதலில் பத்து மொழி படிக்க வைக்கட்டும் பத்து மொழி யாருக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள். உங்களுடைய மகன் மற்றும் பேரனுக்கு 10 மொழி சொல்லிக் கொடுத்து உள்ளீர்களா ஊருக்குள்ள உங்களுக்கு ஒண்ணா வழி என்பது சாமானிய மக்களின் வாழ்க்கையில் பயன்படுத்துகிற மொழியில் கல்வி வரவேண்டும் அதன் விளைவாகத்தான் சிந்திக்கிற மற்றும் மேம்பாட்டுத்திறன் மேம்படும் அதனால்தான் இருமொழிக் கொள்கை ஆதரிக்கிறோம் என மாணிக்கம் தாகூர் கூறினரர்.