• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டெல்டா, பீட்டாக்கே முடியல… இதுல உருமாறிய கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’

Byமதி

Nov 27, 2021

புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வரும்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசுக்கு பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வழங்கி இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்தான ஒமிக்ரான் என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ், கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசை கவலைக்குரிய வைரஸ் வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.