பாலுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என். செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு தழிழ்நாடு அரசு 1 லிட்டர் பாலுக்கு ஊக்கத் தொகை ரூ 3 வீதம் தமிழக முழுவதும் வழங்க வேண்டிய ரூபாய் 100 கோடியை பால் சொசைட்டி மூலமாக உடனே வழங்கிட வேண்டும். ஆவின் நிர்வாகமே பால் பணத்தை ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்,பால் லிட்டர் 1க்கு 10 ரூபாய் விலை உயர்வு அளிக்க வேண்டும். மாட்டு தீவணத்தை 50% மானியத்தில் வழங்கிடவும், இலவச மாட்டுக் கொட்டகை திட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்து சங்கத்தை சேர்ந்த அனைவரும் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தாவிட்டால் மாநில அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என மாநிலத் தலைவர் முகமது அலி தெரிவித்தார்.