தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கபட்ட முதியவரை காவலர்கள் கண்முன்னே வழக்கறிஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நேற்று இரவு மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவர் சாலையின் நடுவே நிற்பதாக தாம்பரம் போலீசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர்,
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு, அவரின் மகனை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அயனாவரம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (60) என்பதும் கடந்த மூன்று வருட காலமாக மனநலம் பாதிக்கபட்டவர் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், கடந்த 19 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிதையும் தெரிவித்தார்,

அப்போது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர்கள் ஆன சைத்தாப்பேட்டை நீதிமன்ற வழக்கதிஞர் மணிகண்டன் (31) மற்றும் ஆந்திர மாநிலத்தில் எல்.எல்.பி ஐந்து ஆண்டு படித்து வரும் மாணவர் வினோத் (28) திண்டிவனம் நோக்கி வந்தவர்கள் தாம்பரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக தங்களது காரை நிறுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மனநலம் பாதிக்கபட்ட ரங்கநாதன் அவர்களின் கார் கதவை திறந்து மூடியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் இருவரும் காவலர்கள் கன்முன்னே சரமாரியாக ரங்கனாதனை தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
காவலர்கள் கண்முன்னே மனநலம் பாதிக்கபட்டவரை வழக்கறிஞர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.