• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ByKalamegam Viswanathan

Feb 20, 2025

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோன்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. நேற்று மாலை முதல் குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளரிடமும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி குழந்தைகள் வயதானவர்கள் பள்ளங்களில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும்ஃ மேலும் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்