• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெற்றிலைக்குள் ஒளிந்திருக்கும் அற்புதம்

Byவிஷா

Feb 17, 2025

வெற்றிலை பாக்கு என்றாலே நம்முடைய தாத்தா பாட்டிக்களுடன் தொடர்புடைய பொருளாக கருதி, அவற்றை ஒதுக்கிவிடும்.. இதன்காரணமாக, வெற்றிலைக்குள் ஒளிந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ளாமலேயே விட்டுவிடுகிறோம்
வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும்.. அதனால்தான் வெற்றிலை கொடி என்கிறார்கள்.. மற்ற நாடுகளைவிட நம்முடைய இந்தியாவில் வெற்றிலை போடும் பழக்கம் அதிகமாம். சாப்பாட்டுக்கு பிறகு, வீட்டில் பெரியவர்கள் வெற்றிலை போடுவதை ஒரு பழக்கமாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்..
கடவுள்களுக்கும், சுபநிகழ்ச்சிகளும் வெற்றிலைக்கட்டினை வைப்பார்கள்.. இந்த இலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், என ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன..
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது… நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்..
இதை அளவோடு சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடும் நீங்கும். வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்… வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.. வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்…
இளஞ்சூடான வெற்றிலையை, பேஸ்ட் போல செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.. அப்படி செய்தால், வெற்றிலையிலுள்ள சாறு உடலில் உள்ள உள் வலிகளை அகற்றும்.. அதுமட்டுமல்ல, ரேடிக்கல்களை அகற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் உடையதுதான் இந்த் வெற்றிலைகள்.

ஆயுர்வேத சிகிச்சையில், இந்த வெற்றிலையை நிறைய பயன்படுத்துவார்கள்.. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிட வலியுறுத்துகிறார்கள்.. இரவில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போட்டுவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.. குடல் இயக்கத்தை எளிதாக்கும்.. அருமருந்து: அதேபோல, சுவாச பிரச்சனைகளுக்கு வெற்றிலைகள் அருமருந்தாக உள்ளன.. இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு வெற்றிலை உதவுகிறது… மார்பு, நுரையீரல் அடைப்பு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிலையை பயன்படுத்தலாம்.. இந்த வெற்றிலையில், சிறிது கடுகு எண்ணெயை தடவி சூடாக்கி மார்பின்மீது வைத்தாலே போதும்.. நிவாரணம் மெல்ல கிடைக்கும்.. 2 கப் தண்ணீரில் போட்டு சில வெற்றிலைகளையும், ஏலக்காய், கிராம்பு லவங்கப்பட்டை போன்றவற்றையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. 2 கப் தண்ணீர் 1 கப் ஆகும்வரை கொதித்தவுடன், அந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிட்டால் அத்தனை சுவாச பிரச்சனைகளும் காணாமல் போயிவிடும்.

வெற்றிலை ஒரு ஆன்டிசெப்டிக் நிறைந்த இலையும் கூட.. காரணம், இந்த வெற்றிலைகளில் பாலிபினால்கள் அதிகம் காணப்படுகின்றன.. கீல்வாதம், ஆர்க்கிடிஸ் சிகிச்சைகளில் வெற்றிலைகளை அதிகம் பயன்படுத்த காரணமே இதற்காகத்தான். பூஞ்சை தொற்றுகளை ஒழிக்கவும் வெற்றிலை உதவுகிறது. வெற்றிலைக்குள் ஏகப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்துள்ளன.. இவைகளை நாம் மெல்லும்போது, வாயில் வசிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகின்றன.. மேலும், வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுவதுடன், பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்று போன்றவற்றையும் இந்த வெற்றிலை நீக்குகிறது. புகையிலை: வெற்றிலையை புகையிலை மற்றும் வெற்றிலையுடன் சேர்த்துக் கொள்ளும்போது, வாய்வழி புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.. ஆனால், வெறும் வெற்றிலையில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பலன்களை கொண்ட பைட்டோ கெமிக்கல்களும் நிரம்பி உளளதாம்.