• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது – M.P மாணிக்க தாகூர் பேட்டி

ByKalamegam Viswanathan

Feb 8, 2025

மதுரை திருநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார்.

M.P மாணிக்க தாகூரிடம் டெல்லி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய போது.., ஆணவத்தால், அகங்காரத்தால் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி. இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்தியா கூட்டணியை பாதுகாத்திருக்க வேண்டும், பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததாலேயே தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இணைந்திருந்ததால் நிச்சயம் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அகங்காரத்தின் காரணமாக தற்போது தோல்வியை தழுவுகிறார்கள். தற்போது பாஜக டெல்லியில் வெற்றி பெறுவது டெல்லிக்கு ஆபத்தாக முடியும்.

அதற்கு காரணம் ஆம் ஆத்மி கட்சி தான். இந்தியா கூட்டணி தலைவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் வெற்றி பெறாததற்கு காரணம் ஆம் ஆத்மி தான் நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்தோம்.

கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியதே காரணம் என்ற மாணிக தாகூர் திருமாவளவன் டில்லி தேர்தல் முடிவை பார்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க வேண்டும் என கூறியதை வரவேற்பதாக தெரிவித்தார்.