• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

BySeenu

Feb 7, 2025

கோவை டவுனால் பகுதியில் விக்டோரியா ஹாலில் சாதாரணமான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டிரோன் நிலவரி எனக் கூறி, அதிகமான வரியை வசூலித்து வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் ஓட்டு வீடு வைத்து இருப்பவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரியை போட்டு உள்ளனர்.

அனுபவம் இல்லாத பில் கலெக்டரை போடுவதால், இதுபோன்ற உடன்படிகள் ஏற்படுகிறது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாமன்ற அலுவலகம் மேயர் இருக்கை முன்பு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அலுவலகம் வெளியே வந்து கவுன்சிலர் பாதகை ஏந்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல மாமன்றம் நடக்கும் அலுவலகம் முன்பு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஆண்டு, ஆண்டு ஆறு சதவீத வரியை போட்டு உள்ளார்கள். அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குடிசை தொழிலை நசுக்க வேண்டாம். தொழில் வரி என அவர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாங்கள் புகார் கொடுத்தாலும் மேயர் ரங்கநாயகி பரிசீலனை செய்ய இல்லை என புகார் தெரிவித்தனர். மாநகராட்சி வளாகம் முன்பு உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.