• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

குட்நியூஸ்…தொடர் விடுமுறைக்காக 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

வார விடுமுறை, முகூர்த்தம் மற்றும் தைப்பூசத்திற்காக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து 1,320 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (பிப்ரவரி 7), பிப்ரவரி 8, 9- ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இந்த மூன்று நாட்களும் 910 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.