• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சமத்துவ மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு ரூ.10லட்சம்-முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

Byகாயத்ரி

Nov 24, 2021

தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


சட்டமன்றத்தில் விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாட்டில்உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.


அதன்படி, சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநரை அணுகி சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் விவரங்களை பெற்று தொகுக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் சென்னை தவிர்த்து மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்க நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.