• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு…

Byகாயத்ரி

Nov 23, 2021

கடந்த வாரம் திருமணம் செய்துகொண்ட ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடிக்கு சிம்பு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சின்னத்திரை நடிகர்கள் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் நவம்பர் 15ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பூவே பூச்சூடவா தொடரில் நடித்த போது தான் அவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்தது.


சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மதன் பாண்டியன் மற்றும் ரேஷ்மா ஜோடிக்கு இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்தனர்.


இந்நிலையில் மதன் ரேஷ்மா ஜோடிக்கு நடிகர் சிம்புவும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அவர்களுக்கு வீடியோ கால் செய்து வாழ்த்து கூறி இருக்கிறார். இந்த வீடியோவை மதன் பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.