• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

Byமதி

Nov 23, 2021

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டும் உபரி நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்,, சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2829 மில்லியன் கன அடியும், மொத்த உயரமான 21.20 அடியில் தற்போது, 19.08 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 500 கனஅடி என்ற வீதத்தில் திறக்கப்பட்ட உபரி நீர், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக புழல் ஏரிக்கு விநாடிக்கு 1500 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனையடுத்து உபரி நீர் திறப்பு 500 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.