• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்..

Byமதி

Nov 23, 2021

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ஜெயந்திரேன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணு பிரியா, சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியா, தனது சொந்த ஊருக்கு பயணம் செய்ய முடியாத நிலையில், யானைகவுனி காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் நேற்று தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் 5 வகையான உணவுகளுடன் யானைகவுனி காவல் நிலையத்திலேயே விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சி அறிந்து அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் இருந்தும் போலீசார் வந்து காவலர் விஷ்ணு பிரியாவை வாழ்த்திச் சென்றனர்.

காவல் நிலையத்தில் சொந்த பந்தங்கள் போல காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.