ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறைத்தீர் கூட்டம் நடத்தப்படும். பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை வழங்கி தீர்வு காண்பர்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
