தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை 58 ஆயிரத்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஈரான்-இஸ்ரேல், உக்ரைன்- ரஷ்யா இடையிலான மோதல் காரணமாகவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் காரணமாகவும் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீது மக்கள் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் ஏற்படுகின்ற தட்டுப்பாடு காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
.
இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று திடீரென அதிகரித்தது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் ஒரு கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 7,260 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்களும், நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர்.