சிவகங்கை நகர் மாவட்ட திமுக சார்பில் ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில்அரண்மனை முன்பாக உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட திமுக சார்பில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணித்த அடாவடித்தன ஆளுநர் ரவியை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில இளைஞரணி புரவலரும் முன்னாள் அமைச்சருமான ம.தென்னவன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் நகர் கழகச் செயலாளரும் நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஆளுநர் ரவியை கண்டித்தும் எடப்பாடியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன . இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப. மதியரசன், மாரியப்பன் கென்னடி, காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்து்துரை, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட அவைத் தலைவர் கணேசன் மற்றும்அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






