• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jan 6, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முழுவதும் தேமுதிக கட்சி சார்பாக கட்சி பொதுச் செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க திருமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் பொங்கல் தொடுப்புடன் வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பாலியல் வன் கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மழை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெயரளவுக்கு வழங்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதை கண்டிக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக தெற்கு மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.