பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு அக்கட்சியின் தலைமை, அந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் புதிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளது.
பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த நிலையில் பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் தற்போது பாஜக தேசிய தலைமை தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. அதாவது அந்தமானில் பாஜக அமைப்பு தேர்தலை நடத்தும் பொறுப்பு தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொள்ளும் தமிழிசை சௌந்தரராஜன் ஜேபி நட்டா மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரை சந்திக்க இருக்கிறார். மேலும் பாஜகவின் தேசிய தலைவர் விரைவில் மாற்றப்படும் நிலையில் அதைத்தொடர்ந்து மாநிலங்களுக்கும் தலைவர்களை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பொறுப்பு
