• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

டி20 தொடரை 3 – 0 என வென்றது இந்தியா!

Byமதி

Nov 22, 2021

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த தொடரில் இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் ஷர்மா, 159 ரன்களை மூன்று போட்டிகளில் விளையாடி எடுத்துள்ளார். இந்த தொடரில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் ஒருவர் குவித்த ரன்கள் இது. இந்திய அணியின் பவுலர் ஹர்ஷல் பட்டேல் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி சார்பில் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகி உள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

எதிர்வரும் 25-ஆம் தேதி இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.