• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது வழக்கு

ByP.Kavitha Kumar

Dec 27, 2024

சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஜெயக்குமார் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஜெயக்குமார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 417 பாஜகவினர் மீதும் கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.