வாடிப்பட்டி பேரூராட்சி புதிய கட்டிடம் அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் ஆர்வி நகரில் அம்ரித் திட்டத்தில் புதிய பூங்கா திறப்பு விழா பொட்டல்பட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேரூராட்சியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, சோழவந்தான் எஸ்.எஸ்.கே. ஜெயராமன், வாடிப்பட்டி பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், வாடிப்பட்டி பேரூர் துணைத்தலைவர் வழக்கறிஞர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன், மாறன், சி. பி. ஆர். சரவணன், ரேகா, வீரபாண்டி, தியாகமுத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, இளைஞர் அணி வெற்றிச்செல்வன், யூனியன் துணைத்தலைவர் கண்ணன், நாச்சிகுளம் பாஸ்கரன், வாடிப்பட்டி நகர துணை அமைப்பாளர்கள் ஜெயகாந்தன், கண்ணன், இளைஞர் அணி வினோத், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், தொகுதி அமைப்பாளர் அரவிந்த் மற்றும் வாடிப்பட்டி பேரூர் 18 வார்டு திமுக செயலாளர்கள், தொமுச நிர்வாகிகள், தலைவர் அமிர்தராஜ், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலை 6 மணி முதல் பூமி பூஜைக்கான மகாயாகம் நடைபெற்றது. பிரம்மஸ்ரீ பாலமுருகன் சர்மா சிவ ஸ்ரீ ரிஷிகேசன் சிவம் குழுவினர் யாகம் நடத்தினர்.
