• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

டிச.10 வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Byவிஷா

Dec 5, 2024

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று டிசம்பர் 5ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் மாட்டம் பூதலூரிலும், திருச்சி மாவட்டம் துவாக்குடியிலும் தலா 50 மி.மீ. மழை பதிவானது.
குன்னூர், கேத்தி, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கீழச்செருவை (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.