• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்கள்

ByP.Thangapandi

Dec 2, 2024

உசிலம்பட்டியில் இயங்கி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயின்று காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்களை உசிலம்பட்டி எம்எல்ஏ பாராட்டி கௌரவ படுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகள் இலவசமாக பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போட்டி தேர்வுகளில் கிராமப்புற மாணவ, மாணவிகள் காவலர் தேர்வு, குருப் 4, குருப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் தேர்வாகி அரசு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் இந்த இலவச பயிற்சி மையத்தில் பயின்ற உசிலம்பட்டி கிராமப்புற மாணவர்களான லட்சுமணன், குணால், தனிக்கொடி, அஜித்குமார், விஜய், சிவன்ராஜ் என்ற 6 பேர் தேர்வாகியுள்ளனர். காவலர் தேர்வில் தேர்வாகி காவலராகியுள்ள இந்த 6 மாணவர்களுக்கு பாராட்டு விழா அறக்கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில்
பி கே எம் அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, பொருளாளர் பிரபாகரன், முன்னாள் தலைவர் புலவர் சின்னன் முன்னிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆறு மாணவர்களையும் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஜான்சன், பிரபு, சசி, அழகுமாரி, வேங்கை மார்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் காவலர்களாக தேர்வான மாணவர்களை பாராட்டி நாளை முதல் நடைபெறும் காவலர் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.