• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…காப்பாற்றுமா மாவட்ட நிர்வாகம்..?

கடைய நல்லூர் நகராட்சி மெயின் பஜாரில் இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் ? பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் உயிரை காப்பாற்றுமா மாவட்ட நிர்வாகம்? வியாபாரிகள் கலக்கம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் – சேர்ந்த மரம் மாநில நெடுஞ் சாலை மெயின் பஜாரில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட கட்டிடத்தின் ஸ்திரதன்மை இழந்து இப்போதோ அல்லது எப்போது வேண்டுமாயினும் இடிந்து விழும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கட்டிடத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும் இக்கட்டிடத்தின் சின்ன ப்ளாஷ் பேக் ………

1980 களில் நடுநிலைப் பள்ளி பயின்று வந்த மாணவர்களின் கனவு பிரதேசமாக 30 படிகளில் ஏறி எட்டாத உயரத்தில் போடப்பட் டிருக்கும் கயிறு கட்டிய பென்சிலால் கையெழுத்திட்ட நாட்கள் பசுமரத்தாணி போல் இன்னும் கடையநல்லூர் வாழ் மக்களை அண்ணாந்து பார்க்க வைத்த பிரமிப்பான கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு பொது நூலகம் அமைந்த கட்டிடம் தான் (இது நாள் வரை அரசு பொது நூலகம் இடம் விட்டு இடம் மாறி வாடகை கட்டிடங்களில் மட்டும் இயங்கி வருகிறது என்பதுவேறு விஷயம்). நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி 8ம் வகுப்பு முதல் இயங்கி வந்தது.

இப்போது மேல்நிலை கல்வி வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருவழி கல்வியில் நகரில் பல்வேறு இடங்களில் கிளைகள் வைத்து நடைபெறுகிறது. இக்கட்டிடத்தின் பின் பக்கம் உள்ள தர்ஹா மைதானம் தான் பள்ளியின் விளையாட்டு மைதானம் இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தமிழ்நாடு சிறு பான்மை நலன் ஆணைய தலைவராயிருக்கும் பீட்டர் அல்போன்ஸ் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இக்கட்டிடத்தில் தர்ஹா அமைந்துள்ளது. முஸ்லீம் பெரியவர் முத்தவல்லியாக இருந்த போதிலும் மதமாச்சர்யங்களை மறந்து இந்து சமுதாயத்தை சார்ந்தவர்கள்.

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பிணி நீக்க நாடி வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் தர்ஹா. பல்வேறு வகையான கடைகள் உள்ளன. கடைய நல்லூர் நகரின் மெயின் பஜாரில் அமைந்துள்ள கட்டிடம் ஸ்திரதன்மையற்று இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் கட்டிடத்தின் மேற்பரப்பில் (மாடியில்) சில வகுப்புகள் நடைபெறுவதால் மாவட்டக் கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வேறிடத்திற்கு மாற்ற உத்திர விட வேண்டும்.

வருவாய் துறையினர் நகராட்சி நிர்வாகம் தீ அணைப்பு மீட்பு பணிகள் மற்றும் காவல் துறையினரும் குறிப்பிட்ட கட்டிடத்தின் ஸ்திரதன்மையை ஆய்வு செய்து தமிழ்நாடு வஃக்பு வாரியத்துக்கு தகவல் கொடுத்து இடிந்து விழும் முன் பொருள் மற்றும் உயிர் சேத இழப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இக்கட்டிடத்தில் கடையில் வாடகைக்கு வியாபாரம் செய்யும் உரிமையாளர்கள் ஒன்று கூடி வஃக்பு வாரியத்துக்கும் தர்ஹா நிர்வாகத்துக்கும் ஆபத்து அருகில் இருப்பதை உணர்த்தி கடிதம் எழுதியுள்ளனர். ஆகவே பொது மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாகும்.