• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி.

ByP.Thangapandi

Nov 11, 2024

பேரையூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மற்றும் சரக்கு லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரு இளைஞர் பலி. மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வண்டப்புலியைச் சேர்ந்த இளைஞர் அன்னக்கொடி, மெக்கானிக் ஆக பணியாற்றி வரும் இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான வரதராஜ், மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் வண்டப்புலியிலிருந்து உசிலம்பட்டி சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

மங்கல்ரேவு – வீரளாம்பட்டி பிரிவு அருகே இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது ஆட்களை ஏற்றி வந்த வேன் மோதியது, இதில் நிலை தடுமாறி சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரியும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அன்னக்கொடி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் வரதராஜ், மணிகண்டன் என்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலென்ஸ் உதவியுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்த வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த அன்னக்கொடி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.