தீரன் அதிகாரம் பட பாணியில் நடைபெற்ற கொலை சம்பவம்…
தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்த பல்லடம் போலீசார்…
கார் தங்க நகைகள் பறிமுதல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை நான்கு வழி சாலை பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் 70. இவர் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர் அப்போது கண்ணம்மாள் கை கால்கள் கட்டப்பட்டு முகம் துணையால் சுற்றப்பட்டு கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் கைகளில் அணிந்து இருந்த வளையல்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவே அங்கு சென்ற பல்லடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர் மேலும் சம்பவ இடம் சென்ற காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தொடர்பாக விசாரணை நடத்தினர் மேலும் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையானது தொடங்கப்பட்டது. மேலும் நாலு தனி படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பவத்தில் தொடர்புடைய மாதப்பூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பவத்தில் தொடர்புடைய கருத்த பாண்டி 27 பொன்னுச்சாமி மகன் இசக்கிமுத்து 41 கோடி முத்து மகன் இசக்கி முத்து 27 ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாஸ்கர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் தேடி வந்த நிலையில் கேரளா எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் எடுத்து அங்கு சென்ற போலீசார் பாஸ்கரன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்..,
வழக்கின் முக்கிய எதிரியான பாஸ்கர் கொலை செய்யப்பட்ட கண்ணம்மாள் வீட்டின் அருகே உள்ள உணவகத்தில் வேலை செய்த வந்ததாகவும், அப்போது இருந்தே அவர் கண்ணம்மாளை நோட்டமிட்டு வந்ததாகவும், அப்போது அவரது நண்பர்கள் நாலு பேரை வைத்து திட்டம் தீட்டி கண்ணமாலை கொலை செய்து நகைகளை திருடியதாகவும், மேலும் வழக்கில் தனிப்படை காவல் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு எவ்வித துப்பும் இல்லாத வழக்கில் சாட்சியங்கள் சேகரித்து எதிரிகளை கண்டுபிடித்த தனிப்படை காவல் அதிகாரிகளை அவர் வெகுவாக பாராட்டினார். மேலும் பல்லடம் பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நிச்சயமாக குற்ற சம்பவங்கள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எவ்வாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்புகையில் பதிலளித்த அவர் காவலர்கள் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்படுவார்கள் என்றும், மேலும் சிசிடிவி கேமரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.