• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு…

BySeenu

Oct 4, 2024

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது குப்புசாமி நாயுடு மருத்துவமனை. இந்த மருத்துவமனை 10 ஆண்டுகளுக்கு முன் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த புற்றுநோய் என்பது உணவு பழக்க வழக்கங்களால் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 18 வயது தாண்டிய அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது.இங்கு சாய கழிவு உள்ளிட்ட காரணமாக புற்று நோய் அதிகரிகரிக்கிறது. இந்த மருத்துவ சோதனையில் 110 க்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் கண்டரியபட்டுள்ளது உள்ளது. தமிழகம் முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பணி தொடங்க உள்ளது.
இதுவரை தமிழகத்தில் 36 மருத்துவ திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் செயல்பட்டு வருகிகிறது என தெரிவித்தார்.