கோவை நூறடி சாலையில் ஏசூஸ் (ASUS) நிறுவனத்தின் சிஸ்டெக் எனும் புதிய ஹைப்ரிட் ஸ்டோர் துவங்கப்பட்டது.
நவீன மயமாக துவங்கப்பட்ட இதில், கன்ஸ்யூமர் நோட்புக்ஸ், லேப் டாப்ஸ் மற்றும் கேமிங் டெஸ்க்டாப்கள், உபரிபாகங்கள் என கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்து வகைகளையும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ASUS (ஏசூஸ்) இந்தியா, நாடு முழுவதும் பிராண்டின் சில்லறை வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் தனது சில்லறை விற்பனை மையங்களை அதிகபடுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை நூறடி சாலையில்,10 வது வீதி துவக்கத்தில் சிஸ்டெக் எனும் தனது ஹைப்ரிட் (Pegasus & ROG) ஸ்டோரைத் தொடங்கியுள்ளது.
700 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இதில், கன்ஸ்யூமர் நோட்புக்ஸ், ரிபப்ளிக் ஆப் கேமர்ஸ் கம்ப்யூட்டர்கள் மடிக்கணினிகள், ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டர்ஸ், கேமிங் டெஸ்க்டாப்கள், உபரிபாகங்கள் மற்றும் கிரியேட்டர் சீரிஸ்கள் என கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்தும் ஒரே மையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
புதிய விற்பனை மையத்தை ஏசூஸ் இந்தியாவின் தேசிய விற்பனை மேலாளர் ஜிக்னேஷ் பவ்சர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிஸ்டெக் ஷோரூம் மையத்தின் நிர்வாக இயக்குனர் குமார், ஏசூஸ் தமிழக விற்பனை பொது மேலாளர் சதீஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த ஹைபிரிட் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் லேப் டாப்புகளை பரிசோதனை செய்து அதன் செயல்பாட்டை ஷோரூம்களிலேயே உறுதி படுத்தி கொள்ள முடியும்.
மேலும், இலவச கேமிங் மண்டலங்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் உயர்நிலை கேமிங் மடிக்கணினிகளைக் கூட நேரடியாகப் பயன்படுத்திப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.