• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இனி இரண்டு நாட்கள் தடுப்பூசி-அரசு அறிவிப்பு

Byகாயத்ரி

Nov 17, 2021

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வாரம் இருமுறை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மக்கள் அசைவ சாப்பிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியதால் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் வரும் நாட்களில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படும்.


வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இந்த முகாம்கள் செயல்படும். மேலும் திங்கள் கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் வழக்கம் போல் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும்.அனைத்துமக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில் , இதுவரையில் தடுப்பூசிபோட்டுக் கொள்ளாதவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.