• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வணிகவரித்துறையினர் பணியிட மாற்றத்தை கண்டித்து அறிக்கை

Byமதி

Nov 16, 2021

வணிகவரித்துறையில் பொதுமக்களின் நலன் கருதி எனக்குறிப்பிட்டு 100க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டித்துள்ளது.

இதுபற்றி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் லெட்சுமணன், ஜனார்த்தனன், சுவாமிநாதன் மற்றும் ஜெயராஜராஜேஷ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வணிகவரி ஆணையார் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக இந்த பணியிட மாறுதல்களை திரும்பப்பெற வேண்டும் இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.