• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

Byதரணி

Sep 17, 2024

திண்டுக்கல், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் – கலாராணி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகள் செல்போன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து மாணவி வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

பெற்றோர்கள் மாணவியை மீட்டு வேடசந்தூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.