• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ByN.Ravi

Aug 23, 2024

மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயிலே தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மன் சன்னதியில் சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவ கிரக ஹோமங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, வராகி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக, வராயி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல, மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்து
மாரியம்மன் ஆலயத்தில், உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதே போல, மதுரை தாசில்தார் சித்தி விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், மாதந்தோறும், வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி நாள்களில், வராஹியம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஆன்மீக பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.