• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் அரியவகை நோரோ வைரஸ்

Byமதி

Nov 14, 2021

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு விலங்குகளால் பரவும் அரிய நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ், அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு வயிறு மற்றும் குடல்ப்பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதோடு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.