• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Jul 29, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக்கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன் அறிவுறுத்தளின்படி,மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்ராஜா மாறன் ஆகியோர் தலைமையில்தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் முகமது தாரிக்,இந்து மகா சபா தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்ப பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பேசியவர்கள் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால், நடுத்தரமக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறு, குரு தொழில் செய்பவர்கள் மிகுந்த தொழில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ,பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ,மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வீதிகளில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என்றும், குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்னிந்திய ஃபார் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் சக்திவேல் ராஜ், பிரதீப்,மகளிர் அணிமாநிலத் தலைவி தெய்வ சக்தி, முனிச் சாலை பாண்டி, பழனிவேல்,தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி நிர்வாகிகள் சுரேஷ்,அரவிந்த் பாண்டியன், கனகராஜ், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.