• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now
பேரழகனே!

வெள்ளைத்தாளென காத்திருக்கிறேன்
எழுதிவிடு எனக்குள்..‌உன் நேசக்கவிதை ஒன்றினை

உனதான
நேசப் பெருவனத்தில்
அடைமழை என அமுத மழை பொழிந்து

பெருங்காதலென
ஈரத்தடம் பதித்து
குளிர் தொலைத்து…

மீள மீள வாழ்ந்து விட
முகிழ்த்திருக்கும் என்
ஆயுளின் நேசத்தை….

நீயென்பதை விட வேறென்ன சொல்ல என் பேரழகனே

கவிஞர் மேகலை மணியன்