• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கள்ளத்தனமாக மது விற்றால் உடனே சிறந்த தண்டனை… எஸ்.பி பிரதீப் அதிரடி

Byதரணி

Jun 25, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிந்து சிறையில் தள்ள எஸ்.பி .,பிரதீப் உத்தரவிட்டுள்ளார்

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்புகளை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக குறைந்தது 20 இடங்களில் முக்கிய புள்ளிகள் ,அந்தந்த பகுதி போலீசாரின் ஆதரவோடு சில்லறை மதுபான விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சில்லறை மது விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் போலீசார் அவர்களை சொந்த ஜாமினில் விட்டு விடுவர். அவர்களும் வீட்டுக்கு சென்று மறுநாளே வியாபாரத்தை துவக்கி விடுவார். இதை தடுக்க இனி மது விற்பனையில் ஈடுபட்டு கைதானவர்களை பிடித்தால் சிறை தான் என எஸ்.பி .,பிரதீப் எச்சரித்துள்ளார்.