• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து…தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்!

Followup 2:

செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து… தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்!

தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பர்வதாதேவி. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பர்வதாதேவி, பர்வதாதேவியின் ஆபாச வீடியோ, சாட் பிரச்சினையால் பள்ளிச்செயலாளர் ராஜனுக்கு கொலைமிரட்டல் வரை சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.ராஜன்

இதுதொடர்பாக பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளியின் செயலாளர் ஜி.ராஜன், தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், பல்வேறு பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அவரின் புகாரில், நான் ரா.ம.வீ நடுநிலைப் பள்ளியின் செயலாளராக இருந்து வருகிறேன். எமது பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் பர்வதாதேவி அவர்கள் எமது பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் உடனான பாலியல் தொடர்பு விஷயமாக மற்றும் ஆபாசமான படங்கள் குறுந்தகவல்கள் மூலமாகவும் செய்திகள் வந்தன. இது சம்பந்தமாக கடந்த 11.4.2024 அன்று பர்வதாதேவி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவை தங்களிடம் அளித்திருந்தேன். அந்த புகார் மீது குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.

பர்வதாதேவியுடன் சிவசுப்பிரமணியன்

அந்த விசாரணையில், விசாரணை அதிகாரி என்னை மிரட்டி பர்வதாதேவியின் ஆபாச படங்கள் மற்றும் செய்திகளை வேறு யாருக்கும் அனுப்பக்கூடாது என்றும், மாவட்ட கல்வித்துறை மூலம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் என்று எழுதித்தர வேண்டும் என்று எழுதி வாங்கினார். ஆனால், தற்போது வரை மாவட்ட கல்வித்துறை மீது துறை ரீதியாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பள்ளி நிர்வாகத்தின் மூலம் இடைக்கால பணி இடைநீக்கம் செய்ய 3.6.2024 அன்று பள்ளிக்கல்வி குழு மூலம் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தெரிந்து கொண்ட பர்வதாதேவி, தனது ஆபாச குற்றங்கள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் உண்மைக்குப் புறம்பாக என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் எமது பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், 10.6.2024 அன்று காலை சுமார் 9 மணியளவில் பர்வதாதேவி தூண்டுதலின் பேரில், அவரது கணவர் சிவசுப்பிரமணியன் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குண்டர்களையும், பத்திரிகை நிருபர் ஒருவரையும் வரச்சொல்லி கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

புகார் மனு

பள்ளிச் செயலாளராகிய நான், அவரிடம் மிரட்டி ரூபாய் 30 லட்சம் பணம் கேட்டதாகவும், மேலும் பள்ளியின் நிலத்தை விற்க முயன்றதாகவும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக பொய்யான குற்றச்சாட்டுகளை வஞ்சக எண்ணத்தோடு தவறான இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பரப்பினார். என்னை அவமதித்து ஆத்திரமூட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். பர்வதாதேவியின் கணவர் சிவசுப்பிரமணியன் ஆபாசமான வார்த்தைகளைக் கூறி என்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். மேலும் அவர் அரசியல், பணம் மற்றும் ஆள் பலம் உள்ளவர்.

எனவே, பர்வதாதேவி வாட்ஸ் அப் குரூப் கால் மூலம் எமது பள்ளியின் பழைய மாணவர்களிடம் ஆபாசமாக செயல்பட்டு இளைஞர்களைச் சீரழித்து வரும் பாலியல் குற்றவாளியாவார். அவரின் கணவர் சிவசுப்பிரமணியன் என்னைக் கொலை செய்ய உடந்தையாகவும் கூட்டுச்சதி செய்து வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்குப் பாதுகாப்பு தந்து மேற்படி நபர்கள் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் கூறியுள்ளார்.

அவரின் இந்த புகாரை உரிய முறையில் விசாரிக்குமாறு திருச்செந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

பர்வதாதேவி முன்னாள் மாணவர்களிடம் ஆபாச சேட்டிங்…