• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடி,வாதாடி 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை தமிழக மக்களுக்கு பெற்று தந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அணையை பலப்படுத்த அதிமுக அரசின் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வந்தது இந்த பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு தடை போட்டு வந்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர், கேரள பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் கேரள அதிகாரிகள் நேரில் பேசி அணையை பலப்படுத்தும் பணியை தொடர்ந்து நடத்த வலியுறுத்தினார்கள்.


இந்நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக பதவியேற்றுள்ளனர்.தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து வருவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியவுடன் அதன் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வடிநிலத்திலுள்ள நூறு வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 565 கோடி மதிப்பீட்டில் பணியினை செயல்படுத்தும் வண்ணம் பணிகள் துரிதமாக நடைபெற்ற முதல் கட்ட பணிகள் முடிந்தது.

இவ்வாண்டு கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில்,இதுவரை மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்று பாசனம் மூலம் தண்ணீர் திறந்துவிடாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது