• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பலத்த காற்று: மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிவு

Byமதி

Nov 11, 2021

சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் முறிந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் எனவும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மாற்றம், தடை ஏற்பட்டுள்ளது.