• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனத்த மழை

ByN.Ravi

Jun 8, 2024

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில், பகல் பொழுதில் கடுமையான வெப்பம் விளவுகிறது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை, விளாங்குடி, பரவை, சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, பள்ளபட்டி, கருப்பாயூரணி, வரிசூர், பூவந்தி, திருப்பத்தூர், சிவகங்கை, அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், ஒத்தக்கடை, சாப்டூர், பேரையூர், செக்கானூரணி, உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மாலை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழையால் சாலை ஓர வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், மழை பெய்து மழை நீர் சாலைகள் தேங்கி நிற்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது‌.
மதுரை நகரை பொருத்தவரை, அண்ணா நகர், மேலமடை, தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் பல தெருக்களில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளன. இதனால், இரவு நேரங்களில் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை, போர்க்கால அடிப்படையில் அகற்ற இப்ப பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி ஆணையாளர் துரித நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை நகரில் தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு ஆகிய தெருக்களில் பல நாட்களாக மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகி வருகிறது. இதனால், நோய்கள் ஏற்படும் என, மக்கள் அஞ்சுகின்றனர். ஆகவே, துரிதமாக தேங்கிய நீரை அகற்ற ,மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.