• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடவு செய்யும் பணி

ByJeisriRam

Jun 6, 2024

தேனி மாவட்டம், வீரபாண்டி. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 இன்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்று ஆற்றங்கரையில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

நிகழ்வை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தியாகராஜன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சேர்மன் தூய்மை பணியை துவக்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விஸ்வநாதன் மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் தினத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ஆலோசனைப்படி சுருளிப்பட்டி அன்பு ராஜா, வீரபாண்டி ஆற்றங்கரையில் பொதுமக்கள் வீசிச் சென்ற பழைய துணி,நெகிழிப்பை,நெகிழி குடுவைகளை அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது.