சிந்தனை துளிகள்
உங்களை நீங்கள் புரிந்து
கொண்டால் தான்.. பிறரை
உங்களால் புரிந்து கொள்ள
முடியும்.!
நீங்கள் எந்த அளவிற்கு
மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?
அந்த அளவிற்கு வாழ்க்கையில்
முன்னேறலாம்.
எண்ணங்கள் என்னும்
மந்திர சாவியை சரியாக
பயன்படுத்தினால்.. திறக்காத
கதவுகளையும் திறக்க முடியும்.!
அடுத்தவரை குறை சொல்வதை
நிறுத்தும் போது தான்
உண்மையான மகிழ்ச்சியை
உணர தொடங்குவீர்கள்.
பகை எண்ணங்களுக்கு சக்தி
கொடுப்பது வீட்டிற்குள்
விஷ செடிகளை
வளர்ப்பதற்கு சமம்.!
பகையை வளர்த்து சக்தி
பெறாமல்.. அன்பை வளர்த்து
சக்தியை பெறுங்கள்.
உங்களை தாழ்த்திக்கொண்டு
இன்னொருவரை உயர்வாக
பேச வேண்டும் என்று
அவசியம் இல்லை.!
மிக பெரிய தோல்வியில் தான்..
மிக பெரிய வாய்ப்புக்கள்
ஒளிந்திருக்கிறது.