• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் ரூ.19 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது 3 பேருக்கு வலை வீச்சு

ByN.Ravi

May 28, 2024

வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நிர்மல் கண்ணன் (வயது 31) அடகு தங்க நகைகளை மீட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜெயராம் என்பவருக்கு பழக்கமான ஒரு நபர் திண்டுக்கல்லில் அடகு வைத்த நகைகள் சுமார் 300 பவுன் மூழ்கப் போவதாகவும், அதை பணம் கட்டி மீட்டு கிரையம் கொடுப்பதாகவும், ஆசை வார்த்தை கூறியதால் திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு 20ந் தேதி 2 காரில் வந்தனர். இதில் நகை வைத்துள்ள நபர் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் இருப்பதாக கூறியதால் ஜெயராமன், நிர்மல் கண்ணன், சிவா, பிரபாகரன் ஆகியோர் ஒரு காரில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு வாடிப்பட்டிக்கு வந்தனர். மாலை 6.30 மணிக்கு பாண்டியராஜபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் பெருமாள்பட்டி ரயில்வே ரோடு அருகே காரில் அழைத்துச் சென்றார். அப்போது அங்கு இருந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க ஆறு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நிர்மல் கண்ணனிடம் இருந்து ரூ.13 லட்சத்தையும் செல்போனையும், சிவாவிடம் இருந்து ரூ.6 லட்சத்தையும், செல்போனையும், பிரபாகரன் இருந்து ஒரு செல்போனும் பறித்துக் கொண்டு சென்றனர். இது குறித்து நிர்மல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். .இந்நிலையில் நேற்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) ராமராஜபுரத்தை சேர்ந்த ஆனந்த் (25 ) அர்ஜுனன்(25) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் முன்னுக்கு பின்முரணாக பதில் சொல்லியவர்கள் தங்க நகை அடகு வியாபாரியிடம் 19 லட்சம் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிட மிருந்து ரொக்க பணம் ரூ.59 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி போலீசார் ஆஜர்படுத்தி மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.