• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பணத்தை திருப்பி கேட்ட பாட்டி அடித்து கொலை..! பேரனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ByN.Ravi

May 28, 2024

வாடிப்பட்டி அருகே எடுத்த பணத் தை திருப்பி கேட்ட பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் வலை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்தவர்வள்ளியம்மை (வயது 84).தனது மகள் விதவையான வெள்ளைத்தாய் மற்றும் 15 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வள்ளியம்மாள் வைத்திருந்த ரூ. 1500 பேரன் எடுத்துச் சென்றான். அதன் பின் நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு வந்த பேரனிடம் எடுத்த பணத்தை திருப்பி கேட்டார் .இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வள்ளியம்மாளை கீழே தள்ளிய பேரன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுவனை வலை வீசி தேடி வருகின்றனர்.