• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய பல்லடம் பகுதி தமிழக வெற்றிக் கழகத்தினர் !!

ByS.Navinsanjai

May 28, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்ன வடுகபாளையம் பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்லடம் நகர ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்லடம் தொகுதி பொறுப்பாளர் ( ம ) ஒன்றிய தலைவர் தளபதி ஸ்டாலின், ஒன்றிய துணைத் தலைவர் முருகேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர நிர்வாகி கோகுல் சஞ்சய், பகுதி நிர்வாகி பேச்சிமுத்து, கோபால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெற்றனர்.