நாடாளுமன்ற தேர்தலுக்கு பின். தேர்தல் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்தி முடித்துவிட்ட நிலையில்,
பாஜக ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஆலோசனை கூட்டம் என்று அறிவித்த நிலையில், குமரி, நெல்லை, விருதுநகர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் பாஜகவின் தேர்தல் கால பண வினியோகத்தில் நடந்த கலவரத்தில். நாகர்கோவில் பகுதிகளில் பாஜகவினரே. தேர்தலில் சிலருக்கு வந்த பணத்தை கட்சியின் பணிகளுக்கு சொற்ப பணத்தை செலவு செய்து விட்டு பெரும் தொகையை ஆட்டையை போட்ட அந்த நபர் யார்?என சுவரொட்டிகள் ஒட்டிய நிலையில், பாஜகவின் தேர்தல் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (மே_27)ம் தேதி சென்னை அமைந்தகரை, அய்யா அரங்கில் நடைபெற்றது கலந்துரையாடல் நிகழ்வு 10 மணி என அறிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எந்தக் கூட்டமாக இருந்தாலும் குறைந்தது 2_மணி நேரம் தாமதமாக வருபவர், இந்த கூட்டத்திற்கு காலை 10.15 மணிக்கே வந்து சொந்த கட்சியினரை ஆச்சரியப்பட வைத்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் காண்பது. கனவா,நனவா என ஒருவர், ஒருவரிடம் உறையாடியதை அந்த கூட்டத்தில் காண முடிந்தது என நாகர்கோவிலில் இருந்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தியின் ஆதாரங்கள் பொது வெளியில் பேசி கொண்டார்களாம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில், பங்கேற்காத வர்கள் பட்டியலில் பொன். இராதாகிருஷ்ணன்
நயினார் நாகேந்திரன் முனைவர்.வினோத்(மத்திய சென்னை வேட்பாளர்) இவர்கள் மூவரும் பாஜக சார்பில் களத்தில் போட்டி இட்டவர்கள், கலந்து கொள்ளாத மற்றொருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி பங்கேற்ற நிலையில், பொன்னார் கலந்து கொள்ளாதது. குமரி மாவட்ட பாஜகவின் கோஷ்டி தன்மையை வெளிப்படுத்துவதை, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காரிய கர்த்தாகர்களாக இருந்தும் தேர்தலில் பணியாற்றாத பிரிவினர்கள் வெளிப்படுத்திய சிதம்பர ரகசியம்.
பொன்னார், நயினார் நாகேந்திரன் பங்கேற்காதது, குறிப்பாக கட்சி கொடுத்த தேர்தல் பணம் முறையாக செலவு செய்யாத காரணத்தால் பொன்னாரும். பாஜகவின் வேட்பாளர்களுக்கு கட்சி கொடுத்த பணம் சரியாக அவரவர் கை களுக்கு போய் சேர்ந்த நிலையில். நயினார் நாகேந்திரனை மட்டுமே சிக்க வைத்த அந்த நபர் யார் என நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு பின், தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற பட்டி மண்டபத்தை தொடங்கி வைத்துள்ளதாம் அண்ணாமலை ஆலோசனை கூட்டத்தில் பேசிய பேச்சான இன்று மேடையில் இருப்பவர்கள் நாளை கிழே இறங்குவார்கள். பார்வையாளராக இருப்பவர்களில் சிலர் மேடையில் அமர்வார்கள், என்பதை கடந்து, அதிமுக விரிசலுக்கு காரணமான அண்ணாமலை ஜெயலலிதா பற்றி ஒரு ஆங்கில இதழுக்கு கொடுத்த பேட்டி காரணமாக அமைந்தது. இன்று அண்ணாமலையின் பேச்சான, மறைந்த ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவி என்பது புதிய சர்ச்சைக்கு விதை தூவியுள்ளது.
